Nouvelle-Calédonie : பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் இராணுவ விமானத்தின் மூலம் வெளியேற்றம்..!

25 வைகாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 12105
Nouvelle-Calédonie தீவில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதை அடுத்து, அங்குள்ள பிரெஞ்சு விமானிகள் இராணுவ விமானம் மூலம் வெளியேற்றப்பட உள்ளனர்.
இன்று மே 25, சனிக்கிழமை காலை முதலாவது விமானம் புறப்பட உள்ளது. அங்கு விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா சென்றிருந்த பிரெஞ்சு மக்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் இரு வாரத்துக்கும் மேலாக சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நிலமைகளை ஆராய இரண்டு நாட்கள் அங்கு பயணித்திருந்தார்.
குறித்த தீவில் உள்ள La Tontouta சர்வதேச விமான நிலையம் கடந்த 14 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அங்குள்ள பயணிகளை இராணுவ விமானங்கள் மூலம் அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025