Aubervilliers : கிரைனைட் குண்டு தாக்குதலில் இருவர் காயம்..!

24 வைகாசி 2024 வெள்ளி 10:10 | பார்வைகள் : 9360
கிரைனைட் குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மே 23, வியாழக்கிழமை இச்சம்பவம் Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீதியின் அருகே நிறுத்தப்பட்டிருந்த Nissan Micra மகிழுந்து ஒன்றுக்குள் கிரைனைட் குண்டு ஒன்றை வீசியுள்ளனர். தன்போது மகிழுந்துக்குள் எவரும் இல்லை எனவும், குண்டு வெடித்ததில் துரதிஷ்ட்டவசமாக வீதியில் நடந்து சென்ற இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீசப்பட்ட கிரைனைட், க்ளிப் ரக M52 வகை குண்டு எனவும், மகிழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரைனைட் குண்டு வெடிக்கும் போது பாரிய சத்தம் எழுந்ததாகவும், அது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1