Paristamil Navigation Paristamil advert login

யாழில் அதிர்ச்சி - பாண்ணுக்கு கண்ணாடித்துண்டுகள்

யாழில் அதிர்ச்சி - பாண்ணுக்கு கண்ணாடித்துண்டுகள்

22 வைகாசி 2024 புதன் 10:43 | பார்வைகள் : 524


யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த கடைக் சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றே பாண் விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொதுச் சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்