வீதியில் போலி ரேடார் கருவியை அமைத்த 12 வயதுச் சிறுவன்..!

21 வைகாசி 2024 செவ்வாய் 10:46 | பார்வைகள் : 14172
12 வயதுடைய சிறுவன் ஒருவன், வீதியில் செல்லும் வாகனங்களை மெதுவாக பயணிக்க வைக்க, போலியான ஒரு ரேடார் கருவியை அமைத்துள்ளான்.
சுவாரஷ்யமான இச்சம்பவம் தென்மேற்கு பிரான்சான Cours-de-Pile (Dordogne) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் Mathys எனும் சிறுவன், அவனது வீட்டுக்கு முன்னால் உள்ள சாலையில், வாகனங்கள் வேகமாகச் செல்வதை அவதானித்துள்ளான். விதிக்கப்பட்ட வேகத்தை விடவும் அதி வேகமாக பயணிப்பதை அடுத்து, மேற்படி ரேடார் கருவியின் பயன்பாடு குறித்து அறிந்துகொண்டான்.
அதன் பின்னர், கழிவுப்பொருட்களை பயன்படுத்தி அச்சு அசல் ரேடார் கருவி ஒன்றை உருவாக்கி, அதனை வீட்டின் வெளியே வீதிக்கருகே அமைத்துள்ளான்.
இதனால் குறித்த வீதியில் ரேடார் கருவியை கண்ட சாரதிகள் மெதுவாக பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2