Paristamil Navigation Paristamil advert login

 2 வாரத்தில் Google Pay சேவை நிறுத்தம்., மாற்றாக வரும் Google Wallet

 2 வாரத்தில் Google Pay சேவை நிறுத்தம்., மாற்றாக வரும் Google Wallet

21 வைகாசி 2024 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 406


ஓன்லைன் பேமென்ட் ஆப்களில், பிரபல செயலியான Google Payயின் சேவைகள் அடுத்த மாதம் நான்காம் திகதி (June 4) முதல் நிறுத்தப்படும்.

Google Pay பல நாடுகளில் செயல்படுகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் 'கூகுள் பே' சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, Google Wallet அந்த இடத்தைப் பிடிக்கும் என கூறப்படுகிறது.

Google Pay-வை விட அமெரிக்கர்கள் Google Wallet-டை அதிகம் பயன்படுத்துவதால் கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கூகுள் பே சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்பதால் கூகுள் பே செயலியை பயன்படுத்தும் இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை என கூகுள் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் நான்காம் திகதிக்குள் கூகுள் பே பயனர்கள் அனைவரையும் கூகுள் வாலட்டுக்கு மாற்றுமாறு அமெரிக்கர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பயனர்கள் ஜூன் 4 வரை Google Pay சேவைகளைப் பயன்படுத்தலாம். காலக்கெடுவிற்குப் பிறகு, அமெரிக்கர்கள் இனி Google Payஐப் பயன்படுத்தி மற்றவர்களிடமிருந்து பணத்தை அனுப்பவோ பெறவோ முடியாது.

தற்போது, ​​சுமார் 180 நாடுகளில் கூகுள் பேக்கு பதிலாக கூகுள் வாலட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்