Paristamil Navigation Paristamil advert login

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

20 வைகாசி 2024 திங்கள் 15:34 | பார்வைகள் : 771


முடக்கொத்தான் என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால் இதற்கு முடக்கொத்தான்  எனப் பெயர் வந்துள்ளது .

முடக்கொத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகைக் கீரையாகும். இது சாதாரணமாகக் கிராமப் புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் குணமாகும்.

முடக்கொத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் குணமாகும்.

வாயுத் தொல்லையுடையவர்கள் முடக்கொத்தான் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை சிறந்தது.

நம் நாட்டில் உள்ள 90 சதவீதமானவர்கள் மூட்டு வலிப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள். அவர்கள் தொடர்ந்து உணவில் முடக்கொத்தான் கீரையைச் சேர்த்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

முடக்கொத்தான் இலைகளை நன்றாகக் கசக்கி வெந்நீரில் இட்டு ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் முடக்கொத்தான் இலைகளைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.முடக்கொத்தான் கீரையை நன்றாக அரைத்து அதன் சாற்றைப் பிழிந்து அதில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி நீங்கும்.

இவ்வாறான பல மருத்துவக் குணங்களைக் கொண்ட முடக்கொத்தான் கீரையை, அன்றாடம் உங்கள் உணவில் சேர்த்து, உங்கள் ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்