Paristamil Navigation Paristamil advert login

அனைத்து இலங்கையர்களுடனும் துணை நிற்போம் - அமெரிக்கா வாக்குறுதி

அனைத்து இலங்கையர்களுடனும் துணை நிற்போம் - அமெரிக்கா வாக்குறுதி

18 வைகாசி 2024 சனி 17:02 | பார்வைகள் : 4036


இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தனது உத்தியோகபூர்வ X வலைத்தள பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். 

நீதி, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக எதிர்பார்க்கும் தரப்பினர் உள்ளிட்ட இலங்கை மக்களுடன் தாம் உறுதியான பங்காளியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய, வளமான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை தாம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக,  ஜூலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்