பரிஸ் : சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் சடலமாக மீட்பு!
18 வைகாசி 2024 சனி 15:14 | பார்வைகள் : 10392
பரிசில் உள்ள *prison de la Santé சிறைச்சாலையில் கைதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 வயதுடைய சிறைக்கைதி ஒருவரே கடந்த திங்கட்கிழமை (மே 13 ஆம் திகதி) சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர் முன்னதாக Sainte-Anne நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருந்த நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, மேற்குறித்த சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனை அடுத்தே அவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்திருந்தார்.
*சிறைக்கைதிகள் சுகவீனமுற்றால், சிகிச்சைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையே prison de la Santé ஆகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan