பரிஸ் : நகைக்கடையில் கொள்ளை!

18 வைகாசி 2024 சனி 14:36 | பார்வைகள் : 8824
இன்று சனிக்கிழமை காலை பரிசில் நகைக்கடை ஒன்றில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Harry Winston நகைக்கடையில் இன்று காலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 11.40 மணி அளவில், கடையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பல்வேறு கொள்ளையர்கள், கடைக்குள் இருந்த விலையுயர்ந்த நகைகளை ஆயுத முனையில் கொள்ளையிட்டனர்.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. ஒன்பது ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடப்பட்ட நகைகளின் பெறுமதி குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.