பரிஸ் : பூங்கா ஒன்றில் இருந்து சடலம் மீட்பு!
13 வைகாசி 2024 திங்கள் 18:36 | பார்வைகள் : 16715
பூங்கா ஒன்றில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத அறை ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மே 13, இன்று திங்கட்கிழமை காலை இச்சடலம் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Buttes-Chaumont பூங்காவில் இருந்து மீட்கப்பட்டது. இங்குள்ள நீண்ட வருடங்களாக பூட்டப்பட்டிருந்த அறை ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டது.
வீடற்றவர்கள் உறங்குவதற்கு பயன்படுத்தும், ‘ sac de couchage' பையிற்குள் குறித்த சடலம் இருந்ததாகவும், உடற்கூறு பரிசோதனைகளுக்கா சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் உயிரிழந்து மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan