Paristamil Navigation Paristamil advert login

முட்டைகோஸ் சாதம்

முட்டைகோஸ் சாதம்

13 வைகாசி 2024 திங்கள் 15:57 | பார்வைகள் : 3468


எவ்வளவுதான் சத்து நிறைந்ததாக இருந்தாலும் சில காய்கறிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். அதில் முக்கியமான ஒன்று முட்டைகோஸ். வீட்டில் முட்டைகோஸ் சமைத்தால் கண்டிப்பாக மீந்துவிடும்.

எனவே குழந்தைகளுக்கு பிடித்தவாறு முட்டைகோஸ் வைத்து ஆரோக்கியமான முறையில் சுவையான சாதம் எளிதாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் - 2 கப்

முட்டைக்கோஸ் - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 1

கேரட் - 1

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - ஒரு பின்ச்

எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 1

கடலை பருப்பு - 1 1/2 டீஸ்பூன்

வேர்க்கடலை - 3 டீஸ்பூன்

முந்திரி - 5 - 6


செய்முறை :

முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டுக்கொள்ளுங்கள்.

கடுகு வெடித்ததும் வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடன் வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்கு கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து இந்த சுவையான முட்டைகோஸ் சாதத்தை அனைவருக்கும் பபரிமாறி மகிழுங்கள்.

இந்த தகவல் பரிஸ்தமிழ் வாடிக்கையாளர்களுக்கு (Paristamil Members) மட்டும் உரித்தானது ! இன்றே இலவச வாடிக்கையாளராக இணைந்து விசேட தகவல்களையும், பல்வேறுபட்ட அசலுகைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் !

Login
N° de portable Mot de passe
Mot de passe oublié ?
Rgister
Nom : Vous êtes : N° téléphone portable : Mail :
Mot de passe :

வர்த்தக‌ விளம்பரங்கள்