Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் காதலியை பார்க்கச் சென்ற காதலன் மரணம்: காதலி கைது

இலங்கையில் காதலியை பார்க்கச் சென்ற காதலன்  மரணம்: காதலி கைது

13 வைகாசி 2024 திங்கள் 15:26 | பார்வைகள் : 5314


குளியாபிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாப்பிட்டிய, இலுகேன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு காணாமல் போன இளைஞனின் சடலம் பல நாட்களின் பின்னர் சிலாபம் – மாதம்பை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், கொலை செய்வதற்கு ஆதரவு வழங்கியமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வலஸ்முல்ல – இழுக்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தனது காதலியை சந்திப்பதற்காக கடந்த 22ம் திகதி வலஸ்முல்ல பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்