நீண்ட காலத்திற்குத் தொடரும் மோசமான வானிலையும் பெரும்மழையும்!!

11 வைகாசி 2024 சனி 12:18 | பார்வைகள் : 9371
எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிரான்ஸ் மிகவும் மோசமான காலநிலையைச் சந்திக்க உள்ளது.
கடுமையான புயற்காற்றுடனான பெரும் மழை பிரான்சில் பெய்ய உள்ளதாகப் பிரான்சின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்தப் புயற்காற்றிற்கும், பெருமழைக்கும், பிரான்சின் எந்த மாவட்டங்களும் தப்பிக்கப் போவதில்லை எனவும், பிரான்ஸ் முழுவதும் இதனால் பாதிப்படையம் எனவும், வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இப்படியான மோசமான காலநிலையானது, தொடர்ச்சியாக எதிர்வரும் மே 23ம் திகதி வரை நீடிக்கும் எனவும், வழமைக்கு மாறாக வெப்பநிலையும் வீழ்ச்சியடையும் எனவும், இந்த வானிலை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025