Paristamil Navigation Paristamil advert login

இளநீர் பாயாசம்

இளநீர் பாயாசம்

11 வைகாசி 2024 சனி 09:59 | பார்வைகள் : 4005


இயற்கையில் கிடைக்கக்கூடிய முக்கியமான பானம் இந்த இளநீர் தான். இதனை வைத்து யார் வேண்டுமானாலும் வீட்டில் செய்து சாப்பிட முடியும் அதும் மிகச் சுலபமாக. இந்த இளநீர் பாயாசம் உடலுக்கு மிக முக்கிய நன்மைகளைச் செய்யக்கூடியது. 

வயிற்றுப்‌ உபசம், மந்தம்‌, உணவு செரியாமை, பெருங்குடல்‌ வீக்கம்‌, ஈரல்‌ கோளாறு, குடல்‌ கோளாறுகள்‌ என அனைத்திற்கும்‌ இது மருந்து மற்றும்‌ உணவு ஆகும்‌.

உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய இந்த இளநீர் பாயாசத்தை எப்படி செய்வது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

இளநீர் வழுக்கை - ஒரு கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

பால் - 2 கப்

தேங்காய்ப் பால் - ஒரு கப்

ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,

வறுக்கத் தேவையான பொருட்கள்

நெய் - மூன்று டீஸ்பூன்

பாதாம் - 5

முந்திரி - 5

பிஸ்தா -5

உலர் திராட்சை - 10 சாரப் பருப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை

வழுக்கையான இளநீரின் உள்ளிருக்கும் தேங்காயை நன்கு கழுவி எடுத்து, அதோடு தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் குழைவாக அரைக்கவும்.
பின்பு அதில் 1/4 ஸ்பூன் ஏலக்காய்த் தூள் சேர்த்து 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். 

ஒரு கடாயில் நெய் விட்டு அது சூடானதும்..உலர் திராட்சை & பருப்புகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அதைத் தனியே எடுத்து வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2 கப் பாலினை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நிறுத்தாமல் நன்கு கிளறவும். 

பால் நன்கு வற்றி பாஸந்தி பதத்தில் வந்ததும் மீதி ஏலக்காய் பொடியைத் தூவி..வறுத்த உலர் பருப்புகளைச் சேர்த்து நன்கு அதைக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இந்தக்கலவை நன்கு ஆறியதும் அரைத்த இளநீர் கலவையைச் சேர்த்துக் கலக்கி இதை 20 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

ருசியான இளநீர் பாயாசம் ரெடி.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்