பரிசில் பாரிய தீ விபத்து! - மூவர் பலி!
8 சித்திரை 2024 திங்கள் 05:07 | பார்வைகள் : 10899
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
146 rue de Charonne எனும் முகவரியில் உள்ள எட்டு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் திடீரென தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் எச்சரிக்கப்பட்டு அழைக்கப்பட்டனர்.
65 தீயணைப்பு வீரர்கள், 17 தண்ணீர் கொள்கலன் வாகனங்களுடன் தீயை அணைக்க பெரும் போராட்டம் மேற்கொண்டனர்.
பலர் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தின் முடிவில் மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தற்பாதுகாப்புக்காக ஜன்னல் வழியாக குதித்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan