Paristamil Navigation Paristamil advert login

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி?

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி?

4 சித்திரை 2024 வியாழன் 09:50 | பார்வைகள் : 688


பிரபல இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி, தற்போது அல்லு அர்ஜுன் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு சில திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒன்றுதான் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் என்பது கூறப்படுகிறது.

இந்த தகவலில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை இயக்குபவர் பாலாஜி தரணிதரன் என்பதுதான். இவர் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பிறகு ’சீதக்காதி’ ‘ஒரு பக்க காதல்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதி படத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்