நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்.
 
                    2 சித்திரை 2024 செவ்வாய் 13:24 | பார்வைகள் : 7588
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விஸ்வேஷ்வர ராவ். இவர் பாலா இயக்கத்தில் உருவான ’பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பாவாக நடித்திருந்தார் என்பதும் தமிழ் மட்டும் இன்றி சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு வயதிலிருந்து நடிக்க தொடங்கிய விஸ்வேஷ்வர ராவ் 300க்கும் மேற்பட்ட நடித்திருப்பதாகவும், திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வேஷ்வர ராவ் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan