ஈஸ்டர் விடுமுறை : பிரித்தானியா நோக்கி கடற்பயணம் மேற்கொண்ட 800 வரையான அகதிகள்!

1 சித்திரை 2024 திங்கள் 14:50 | பார்வைகள் : 13829
ஈஸ்டர் விடுமுறைகள் பிரித்தானியா நோக்கி 800 வரையான அகதிகள் கடற்பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் சட்டவிரோத கடற்பயணங்கள் இவ்வாண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30 சனிக்கிழமை 349 அகதிகளும், மார்ச் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 442 அகதிகளும் பிரித்தானியாவை நோக்கி சிறிய மீன்பிடி படகுகளில் பயணித்துள்ளனர்.
அவர்களில் 79 அகதிகளை பிரெஞ்சு கடற்படையினர் மீட்டனர். அவர்களின் படகு கடலில் மூழ்க ஆரம்பித்த நிலையில், அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
அதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் மொத்தமாக 1,100 அகதிகள் பிரித்தானியாவை நோக்கி பயணிக்க முற்பட்டனர். ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து மார்ச் 27 ஆம் திகதி வரையான நாட்களில் மொத்தமாக 4,600 அகதிகள் கடலைக் கடக்க முற்பட்டுள்ளனர்.
சென்ற 2023 ஆம் ஆண்டில் இதே நாட்களுடன் ஒப்பிடுகையில் இது 23% சதவீத அதிகரிப்பாகும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025