உக்ரேனுக்கு 100 கவச வாகனங்களை அனுப்பும் பிரான்ஸ்!

31 பங்குனி 2024 ஞாயிறு 13:48 | பார்வைகள் : 11283
உக்ரேனுக்கு 100 கவச வாகனங்களை பிரான்ஸ் அனுப்ப உள்ளது. இதனை இன்று இராணுவ அமைச்சர் Sébastien Lecornu அறிவித்தார்.
பிரான்சில் பயன்படுத்தப்பட்ட VAB ரக கவசவாகனங்களையே பிரான்ஸ் அனுப்ப உள்ளது. “பழைய தளபாடங்கள் என்றாலும், நன்றாக இயக்கக்கூடியது. உக்ரேன் இதனால் குறிப்பிடத்தக்க பயனைப் பெறும், 2024 ஆம் ஆண்டு இறுதியிலும் 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் என மொத்தமாக 100 கவச வாகனங்களை அனுப்ப உள்ளோம்!” என அமைச்சர் Sébastien Lecornu தெரிவித்தார்.
குறித்த Véhicule de l'Avant Blindé என குறிப்பிடப்படும் VAB ரக கவசவாகனமானது 40 ஆண்டுகள் பழமையானது. 1979 ஆம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு இராணுவம் பயன்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025