◉ ஈஸ்டர் : நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு!
31 பங்குனி 2024 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 11308
இன்று உதித்த ஞாயிறு நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் இந்நேரத்தில், ஈஸ்ட்டர் தினத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்கும் முகமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் காவல்துறையினர், ஜொந்தாமினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 13,500 வீரர்கள் நாடு முழுவதும் கடமையாற்றிக்கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
நாளை திங்கட்கிழமை மாலை வரை இந்த பாதுகாப்பு தொடரும் எனவும், சந்தேகத்திக்கிடமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan