பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமி பலி!!

31 பங்குனி 2024 ஞாயிறு 08:08 | பார்வைகள் : 10363
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Oise மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுடைய Shanon எனும் சிறுமி கடந்த மார்ச் 6 ஆம் திகதி மிக மோசமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். உடல்நலம் குன்றி அவர் கோமா நிலைக்குச் சென்றிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மார்ச் 27 ஆம் திகதி புதன்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Simone-Veil பாடசாலையில் பயிலும் மாணவர்கள் இச்செய்தியினால் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், கடந்த பல நாட்களாக மாணவர்களுக்கு தொடர் உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 15 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்கள் என அறிய முடிகிறது. அவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிய முடிகிறது.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025