செனேகலுடன் பலப்படுத்தபடும் நட்பு! - ஜனாதிபதி அறிவிப்பு!!

30 பங்குனி 2024 சனி 07:00 | பார்வைகள் : 11779
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான செனேகலுடன் மீண்டும் நட்பை பலப்படுத்த உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
செனேகலின் புதிய ஜனாதிபதி Bassirou Diomaye Faye உடன் நேற்று மார்ச் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைபேசியூடாக உரையாடியிருந்தார். மக்ரோன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். பிரான்சும் செனேகலும் தங்களது நட்பை தீவிரமாக பலப்படுத்தும் என தெரிவித்தார்.
மேற்கு ஆபிரிக்க நாடான சேனேகலின் வரலாற்றில் இளம் ஜனாதிபதியாக Bassirou Diomaye Faye, 54.28% வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக செனேகலுக்கும் பிரான்சுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மாற்றத்துக்குப் பின்னர் நட்பு மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.