Essonne : கத்திக்குத்து இலக்காகி ஒருவர் பலி!!
29 பங்குனி 2024 வெள்ளி 16:53 | பார்வைகள் : 11679
Grigny (Essonne) நகரில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் அங்குள்ள வீடொன்றின் படிக்கட்டில் இருந்து சடலம் ஒன்றை மீட்டனர். அவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Essonne மாவட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் அதன் பின்னரே மேலதிக விபரங்கள் தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan