Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் விசேட வர்த்தக வரியை நீக்கம்!

இலங்கையில்  விசேட வர்த்தக வரியை நீக்கம்!

29 பங்குனி 2024 வெள்ளி 13:19 | பார்வைகள் : 6859


எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளை எளிமையாக்கியதும் இந்த முடிவை எடுத்ததற்கு ஒரு காரணம் என்றும் குறிப்பிட்ட அவர், உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்