ஆசிரியரை கத்தி மூலம் தாக்க முற்பட்ட நான்காம் ஆண்டு மாணவன் கைது!

29 பங்குனி 2024 வெள்ளி 08:44 | பார்வைகள் : 14590
ஆசிரியர் ஒருவரை கத்தியினால் தாக்க முற்பட்ட நான்காம் ஆண்டு மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Crest (Drôme) நகரில் உள்ள François-Jean Armorin பாடசாலையில் இச்சம்பவம் கடந்த மார்ச் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கணிதபாட ஆசிரியரால் வழங்கப்பட்ட வீட்டுபாடத்தை செய்யவில்லை என்பதால் மாணவன் ஒருவர் ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார். அதை அடுத்து, பழிவாங்கும் நோக்கோடு ஆசிரியர் மீது கத்தியால் தாக்க முற்பட்டதாக அறிய முடிகிறது.
ஆனால் அதிஷ்ட்டவசமாக ஆசிரியருக்கு எதுவும் ஆகவில்லை.
செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த மாணவன் உடனடியாக பாதுகாவலரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் மாணவனைக் கைது செய்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025