Paristamil Navigation Paristamil advert login

ஈஸ்ட்டர் : தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

ஈஸ்ட்டர் : தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

29 பங்குனி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 9140


ஈஸ்ட்டர் விடுமுறையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

”அதிகூடிய விழிப்புணர்வு” «extrême vigilance» தேவாலயங்களில் கொண்டுவரப்படும் எனவும், பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற எந்த செயற்பாடுகளையும் தவிர்க்கும் முகமாக காவல்துறையினர் தேவாலயங்களில் இந்த வார இறுதி நாட்களில் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சனை தலைதூக்கியுள்ள நிலையில், பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்டர் விடுமுறையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகளவான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
“சந்தேகத்திடமான நபர்களைக் கண்டறியும் நோக்கங்களுக்காக தேவாலயத்துக்குள் நுழையும் ஒவ்வொரு தனிநபரும் ‘காட்சிகளாக’ படம் பிடிக்கப்படுவார்கள் எனவும், வாகன தரிப்பிடங்களும் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்