Villepinte : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

28 பங்குனி 2024 வியாழன் 17:32 | பார்வைகள் : 9816
Villepinte (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையினரை கத்தி ஒன்றினால் அச்சுறுத்திய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
Avenue André-Malraux வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை காலை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து , சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கட்டிடம் ஒன்றில் 41 வயதுடைய ஒருவர் பல்வேறு கத்திகளைக் கொண்டு அச்சுறுத்தலில் ஈடுபட்டிருந்தார். காவல்துறையினர் கத்திகளை கீழே போட்டு சரணடையுமாறு கோரினர். ஆனால் அவர் காவல்துறையினரை தாக்க முற்பட்டுள்ளார்.
அதையடுத்து காவல்துறையினர் இறப்பர் குண்டுகளினால் ஆன LBD துப்பாக்கியினால் குறித்த நபரை சுட்டனர்.
ஆனால் அவர் அதனையும் தாண்டி மீண்டும் தாக்க முற்பட்ட நிலையில், காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இச்சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025