பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல்! - இரு சகோதர்கள் கைது!!
28 பங்குனி 2024 வியாழன் 14:02 | பார்வைகள் : 11530
இல் து பிரான்சைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த இரு சகோதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் நேற்று மார்ச் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் பிறந்த சகோதர்கள் எனவும், அவர்கள் இல் து பிரான்சில் உள்ள பாடசாலைகள் பலவற்றுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் Malakoff நகரில் வசிப்பவர்கள் எனவும், இருவரும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் உள்ள 130 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மற்றும் இணையவழி சைஃபர் தாக்குதல்களும் பதிவாகியுள்ளன. இந்த வார திங்கட்கிழமை (25 ஆம் திகதி) இல் து பிரான்சுக்குள் உள்ள 30 பாடசாலைகளுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இடம்பெற்றிருந்தன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan