Saint-Quen-l'Aumône : வீடொன்றில் இருந்து 47 கிலோ கஞ்சா மீட்பு! - ஐவர் கைது!
23 சித்திரை 2024 செவ்வாய் 16:55 | பார்வைகள் : 15151
Saint-Quen-l'Aumône (Val-d'Oise) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து 47 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Saint-Ouen-l'Aumône-Liesse தொடருந்து நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே உள்ள வீட்டுக்குள் மாலை 7.30 மணி அளவில் திடீரென நுழைந்த காவல்துறையினர், அங்கு தேடுதலை மேற்கொண்டனர்.
அதன்போது, 41 கிலோ கஞ்சா களி மற்றும் 6 கிலோ உலர்ந்த கஞ்சா ஆகியவற்றை மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஐவர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த வாரத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் 93 ஆம் மாவட்டத்திலும் இடம்பெற்றிருந்தது. அங்குள்ள வீடொன்றில் இருந்து 50 கிலோ வரையான கஞ்சா கைப்பற்றப்பட்டிருந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan