Paristamil Navigation Paristamil advert login

ஐந்து பேர் சாவடைய பலர் காயமடைந்த சம்பவம் இன்று அதிகாலை பிரான்சில் பதிவாகியுள்ளது.

ஐந்து பேர் சாவடைய பலர் காயமடைந்த சம்பவம் இன்று அதிகாலை பிரான்சில் பதிவாகியுள்ளது.

23 சித்திரை 2024 செவ்வாய் 10:51 | பார்வைகள் : 9341


பிரான்சில்  இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் சாவடைந்துள்ளனர். பிரித்தானியாவுக்குள் அனுமதி இன்றி நுழைய முற்பட்ட அகதிகளே இவ்வாறு சாவடைந்துள்ளனர் என Boulogne-sur-Mer காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

110 பேர் சிறியரகப் படகில் இன்று  (23/04/2024) அதிகாலை 5:00 மணியளவில் பிரான்சின் வடபகுதியில் pas de Calais என்னும் இடத்தில் உள்ள plage de Wimereux கடற்கரையில் இருந்து பிரித்தானியா நோக்கி கள்ளத்தனமாக பயணித்த வேளையிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மூன்று ஆண்கள், ஒரு பெண், மற்றும் நான்கு வயதுக் குழந்தை உட்பட ஐவர் பலியாகியுள்ளனர். அதிகாலை வேளையில் கடலின் வெப்பநிலை 0 செல்சியஸ் நிலையில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றனர். 2024 ஆரம்பித்து நான்கு மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் இதுவரை 15 பேர் இவ்வாறான பயணத்தின் போது சாவடிந்துள்ளதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்