எலான் மஸ்க்கின் முக்கிய முடிவு - Tesla டெஸ்லா கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

22 சித்திரை 2024 திங்கள் 09:07 | பார்வைகள் : 5054
அமெரிக்காவின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla) சீனாவில் அனைத்து வகையான மாடல் கார்களின் விலையை சுமார் 2000 டொலர்கள் வரை குறைத்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் விலை குறைந்ததால் டெஸ்லா கார்களுக்கான தேவை குறைந்துள்ளது.
இதனால் சீன சந்தையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோட டெஸ்லாவின் விலை இந்த அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் கார்களின் விலையை குறைத்த எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், சமீபத்தில் சீனாவிலும் விலையை குறைத்துள்ளது.
டெஸ்லா தனது மிகவும் பிரபலமான மாடல் 3 காரின் விலை 14,000 சீன யுவான் (1930 அமெரிக்க டொலர்) குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Tesla Model 3 காரின் விலை 2,31,900 யுவானாக குறைக்கப்பட்டுள்ளதாக சீனா டெஸ்லா இணையதளம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 32,000 டொலர்கள்.
மேலும், Tesla Model Y காரின் விலை 2,49,900 சீன யுவான், Tesla Model S 6,84,900 சீன யுவான்,Tesla Model S Plaid 8,14,900 சீன யுவான் மற்றும் Tesla Model X விலை 8,24,900ல் இருந்து 7,24,900 யுவானாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் Tesla Model Y, Tesla Model X மற்றும் Tesla Model S கார்களின் விலை 2000 டொலர்கள் குறைந்துள்ளது.
மேலும் Full Self-Driving-driver assistant software-ன் விலை 12,000 டொலர்களில் இருந்து 8000 டொலராக குறைக்கப்பட்டுள்ளது.
2024 முதல் காலாண்டில், உலக சந்தையில் டெஸ்லா கார்களின் விற்பனை சரிந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் கார் விற்பனை ஒரு காலாண்டில் சரிந்தது இதுவே முதல் முறை.
இந்நிலையில், உலகின் மிகப்பாரிய சந்தையான சீனாவில் டெஸ்லா தனது கார்களின் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, எலோன் மஸ்க், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களில் 10 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்தார்.
எலோன் மஸ்க் கார் விற்பனையை அதிகரிக்க லாபத்தைக் குறைக்கத் தயங்குவதில்லை. விலை குறைப்பால் டெஸ்லா கார்களின் பங்கு பல மடங்கு சரிந்தது. டெஸ்லாவின் பங்கு இந்த ஆண்டு 40.8 சதவீதம் குறைந்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025