எழுபதுகளின் வயதுடைய பெண்ணின் உடலம் - கொலை விசாரணை ஆரம்பம்!!

20 சித்திரை 2024 சனி 18:58 | பார்வைகள் : 7186
நேற்று வெள்ளிக்கிழமை எழுபதுகளின் வயதுடைய மூதாட்டி ஒருவரின் உடலம் ஜோந்தார்மினரால் அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் Meurthe-et-Moselle இலுள்ள Bertrichamps நகரத்தில் நடந்துள்ளது. இதன் பெரிய நகரான நோன்சி (Nancy) நகர நீதித்துறை, இதனை ஒரு கொலையாக விசாரிக்க, ஜோந்தார்மினரிற்குக் கட்டளை இட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டு பிறந்த, கொல்லப்பட்ட மொனிக் சுசே அவரின் வீட்டில், தடயவியல் துறையினரின் மேற்கொண்ட முதற்கட்டஆய்வில், இவரது வீட்டின் கதவு தெண்டித் திறக்கப்பட்ட அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025