திங்கட்கிழமை வரை - மூடப்படும் A13 நெடுஞ்சாலை!

20 சித்திரை 2024 சனி 03:59 | பார்வைகள் : 10674
A13 நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்நிலையில், இந்த தடை திங்கட்கிழமை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசில் இருந்து Vaucresson நகரம் வரையான A13 நெடுஞ்சாலை முற்றாக மூடப்பட்டுள்ளது. viaduct இல் இருந்து Saint-Cloud சுரங்கம் வரையான இடைவெளிக்குள் வீதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சிலமீற்றர் தூரம் வரை இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை காரணமாக வீதி மூடப்பட்டுள்ளது. (புகைப்படத்தில் காண்க. நன்றி le parisien)
இந்த வீதி முடக்கத்தினால் பொதுமக்கள் A86 மற்றும் A14 நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே A13 நெடுஞ்சாலை மீள திறக்கும் வரை மேற்குறித்த இரு நெடுஞ்சாலைகளையும் இலவசமாக்கும் படி Yvelines மாவட்ட துணை முதல்வர் Karl Olive கேட்டுக்கொண்டுள்ளார். ‘"இது ஒரு பொது அறிவுடையதாகும், இந்த நடைமுறை தீர்வாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025