மீண்டும் புதிய திரைப்படத்தில் இணையும் சூர்யா ஜோதிகா !
19 சித்திரை 2024 வெள்ளி 11:51 | பார்வைகள் : 7920
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில்,சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக செலவில் உருவாகும் திரைப்படமாக கங்குவா இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான ஒரு தகவல் சூர்யாவின் இரசிகர்களை மேலும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சூர்யாவுடன் இணைந்து உயிரிலே கலந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் நடிகை ஜோதிகா.
இந்நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடைசியாக இவர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்தனர்.அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இத்திரைப்படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா அல்லது பெங்களூரு டேஸ் அஞ்சலி மேனன் ஆகியோரில் ஒருவர் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan