52வது பிறந்தநாள் கொண்டாடும் முத்தையா முரளிதரன்

17 சித்திரை 2024 புதன் 08:38 | பார்வைகள் : 4921
இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 17.04.2024 இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு இங்கே காண்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் (133 போட்டிகள்) என்ற இமாலய சாதனைக்கு சொந்தக்காரர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.
அதேபோல் ஒருநாள் போட்டியிலும் 534 விக்கெட்டுகள் (350 போட்டிகள்) வீழ்த்தி முரளிதரனே முதல் இடத்தில் உள்ளார். தனது மாயாஜால சுழற்பந்து வீச்சினால், துடுப்பாட்ட வீரர்களை கதிகலங்க செய்யக்கூடிய முரளிதரன் இன்று 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் கலக்கிய முத்தையா முரளிதரன் 63 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய முரளிதான், 7 ஆண்டுகள் ஐபிஎல் தொடர்களில் விளையாடி 15 கோடியே 28 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) வருமானம் ஈட்டினார்.
கண்டியில் ஆடம்பர வீடு வைத்துள்ள முரளிதரன், பல எஸ்டேட்களுக்கும் சொந்தக்காரர் ஆவார். உலகின் மிகச்சிறந்த சொகுசு கார்கள் சிலவற்றையும் முரளிதரன் வைத்துள்ளார்.
அதில் மெர்சிடிஸ் SUV காரும் ஒன்று. முத்தையா முரளிதரன் ஆண்டுக்கு 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டுகிறார்.
2024ஆம் ஆண்டு கணக்கின்படி முரளிதரனின் மொத்த சொத்து மதிப்பு 9 மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1