Paristamil Navigation Paristamil advert login

சங்கீதா விஜய்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியா?

சங்கீதா விஜய்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியா?

16 சித்திரை 2024 செவ்வாய் 11:56 | பார்வைகள் : 6948


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் மகளுக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

நடிகர் விஜய் நேற்றைய நிகழ்வுக்கு வரவில்லை. வெளிநாட்டில் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவருடைய மனைவி சங்கீதா நேற்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்துவிட்டார்கள் என்ற கிசுகிசு கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. விஜய்யின் திரைப்பட விழாக்களில் சங்கீதா கண்டிப்பாகக் கலந்து கொள்வார். ஆனால், 'மாஸ்டர்' பட விழாவுக்குப் பிறகு அவர் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. சங்கீதா சென்னையை விட்டு லண்டனுக்கே சென்று விட்டார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்றைய நிகழ்வில் சங்கீதா கலந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்