Paristamil Navigation Paristamil advert login

இரு தீவிபத்துக்களின் பின்னர் - மீண்டும் சேவைக்கு வருகிறது Bluebus பேருந்து!

இரு தீவிபத்துக்களின் பின்னர் - மீண்டும் சேவைக்கு வருகிறது Bluebus பேருந்து!

16 சித்திரை 2024 செவ்வாய் 05:27 | பார்வைகள் : 6062


இல் து பிரான்சுக்குள் சேவையில் இருக்கும் Bluebus இலத்திரனியல் பேருந்து, அண்மையில் இரு தீவிபத்துக்களை சந்தித்திருந்தது. தானாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்திருந்தது. அதையடுத்து சேவையில் இருந்த அனைத்து Bluebus பேருந்துகளும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அனைத்து விதமான சோதனை நடவடிக்கைகளையும் நிறைவு செய்துகொண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் அவை சேவைக்கு வந்துள்ளன.

இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து நிறுவனம் (Île-de-France Mobilités) இதனை அறிவித்துள்ளது.

Bluebus பேருந்துகளானது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் Bolloré  எனும் குழுமத்தினால் சேவைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து விளாசி எரிந்தது. இச்சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் மீண்டும் மற்றுமொரு பேருந்தும் தீப்பிடித்திருந்தது. 

அதையடுத்தே அவை சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்