Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois இல் துப்பாக்கிச்சூடு! - இருவர் காயம்!!

Aulnay-sous-Bois  இல் துப்பாக்கிச்சூடு! - இருவர் காயம்!!

15 சித்திரை 2024 திங்கள் 16:31 | பார்வைகள் : 8823


Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர்  காயமடைந்துள்ளனர். 

ஏப்ரல் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணி அளவில் இச்சம்பவம் La Rose-des-Vents நகரில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றில் வருகை தந்த முகக்கவசம் அணிந்த ஆயுததாரி ஒருவர் கண்மூடித்தமாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். இதில் இருவர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் மிக விரைவாக சம்பவ இடத்துக்கு சென்றடைந்த போதும், ஆயுததாரியை பிடிக்க முடியவில்லை. அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். 

சம்பவ இடத்தில் இருந்து 25 வரையான துப்பாக்கி சன்னங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

காயமடைந்த இருவரும் பொபினியில் உள்ள Avicenne  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்