Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

முடிவுக்கு வந்தது பரிஸ் புத்தக கண்காட்சி! - ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

முடிவுக்கு வந்தது பரிஸ் புத்தக கண்காட்சி! - ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

15 சித்திரை 2024 திங்கள் 09:24 | பார்வைகள் : 15169


பரிஸ் புத்தக கண்காட்சி நேற்று ஏப்ரல் 14 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த கண்காட்சியில் 103,000 பேர் பங்கேற்றிருந்ததாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பரிசில் ஆண்டு தோறும் இடம்பெறுகிற ‘ Festival du livre de Paris’ (பரிஸ் புத்தக கண்காட்சி) இவ்வருடம் மூன்றாவது ஆண்டாக ஈஃபிள் கோபுரத்தின் அருகே  ephemeral Grand Palais பகுதியில் ஏப்ரல் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெற்றிருந்தது. 

இதில் மொத்தமாக 103,000 பார்வையாளர்கள் பங்கேற்றிருந்ததாகவும், அவர்களில் 45 சதவீதமானவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் பார்வையாளர்களின் வருகை அதிகரித்திருந்ததாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். 

முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் இடம்பெற்ற புத்தகக்கண்காட்சியில் 102,000 பேர் பங்கேற்றிருந்ததனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்