இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

14 சித்திரை 2024 ஞாயிறு 15:28 | பார்வைகள் : 4138
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
குறித்த விமானத்தை மீண்டும் டுபாய் நோக்கி திரும்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அந்த விமானத்தில் இஸ்ரேல் நோக்கி பயணித்த இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.