9 பேர் கடத்தி சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் அதிர்ச்சி

14 சித்திரை 2024 ஞாயிறு 10:06 | பார்வைகள் : 6521
பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணித்த 9 பேர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, பிரித்தானியா தனது குடிமக்களுக்கு பயணம் செய்வது ஆபத்தானது என எச்சரிக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இணைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் உட்பட மேலும் 08 நாடுகள், இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
குற்றம், போர், பயங்கரவாதம், நோய், வானிலை மற்றும் இயற்கை பேரிடர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள பல காரணிகளை கருத்தில் கொண்டு பிரித்தானியா இந்த பட்டியலை தயாரிக்கிறது.
இதன்படி, ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சூடான், லெபனான், பெலாரஸ் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், அந்த நாட்டில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி, பாகிஸ்தான் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1