மோட்டார் சைக்கிள்களுக்கும் கட்டுப்பாடு! - ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய சாரதிகள்!

13 சித்திரை 2024 சனி 18:04 | பார்வைகள் : 15368
மோட்டார் சைக்கிள்களுக்கு தொழில்நுட்ப பரிசோதனை (Contrôle technique) கட்டாயம் என அரசு கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை எதிர்த்து மோட்டார் சைக்கிள் சாரதிகள் இன்று கண்டன அணிவகுப்பு ஒன்றில் ஈடுபட்டனர்.
இன்று ஏப்ரல் 13, சனிக்கிழமை தலைநகர் பரிசிலும் மேலும் பல நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. Fédération française des motards en colère எனும் அமைப்பைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் 10,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் Contrôle technique சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025