Val-de-Marne : பூங்கா ஒன்றில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு!!
13 சித்திரை 2024 சனி 15:45 | பார்வைகள் : 8648
Noiseau (Val-de-Marne) நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்து மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாதசாரி ஒருவர் காவல்துறையினருக்கு தெரிவித்த தகவலை அடுத்து எலும்புகள் மீட்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள நோர்து-டேம் வனப்பகுதிக்குள் (forêt domaniale de Notre-Dame) பாதசாரி ஒருவர் நடந்து சென்ற நிலையில், அங்கு சில சந்தேகத்துக்கிடமான எலும்புகள் இருப்பதை பார்த்துள்ளார். அதையடுத்து அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அங்கு விரைந்து சென்ற காவல்துறையுனர் எலும்புகளை மீட்டு, தடயவியல் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வழங்கிய தகவல்களின் படி, குறித்த எலும்புகள் 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவருடையது எனவும், காட்டு விலங்கு கடித்த தடயங்கள் உள்ளது எனவும், 10 வருடங்களுக்கு மேற்பட்ட எலும்புகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan