Forges-les-Bains : இரு பிள்ளைகளை கொன்றுவிட்டு விபத்து போல் நாடகமாடிய நபர்!

12 சித்திரை 2024 வெள்ளி 11:12 | பார்வைகள் : 10876
நபர் ஒருவர் தனது இரு பிள்ளைகளை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். பின்னர் அதனை விபத்து போல் சோடனை செய்ய முற்பட்டுள்ளார்.
ஏப்ரல் 11 ஆம் திகதி நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் நபர் ஒருவர் Étampes மருத்துவமனையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நிறைந்த மதுபோதையில் மகிழுந்தைச் செலுத்தி, மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் படுகாயமடைந்துள்ளார். அவர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, அவர் தனது 3 மற்றும் ஒன்றரை மாத குழந்தைகளை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளும் விபத்துக்குள்ளான மகிழுந்தின் பின் பக்க பெட்டிக்குள் (trunk) இருந்து மீட்கப்பட்டது.
பின்னர் உடனடியாக அவரது வீடு சோதனையிடப்பட்டது. அங்கு இரு பிள்ளைகளது தாய் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.