Essonne : மதுபோதையில் நோயாளர் காவுவண்டியை செலுத்திய சாரதி கைது!

12 சித்திரை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 14808
நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் மதுபோதையில் பயணித்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஏப்ரல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Jacques Cartier மருத்துவமனைக்கு அருகே தேசிய காவல்துறையினர் மற்றும் சுகாதாரபிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், நோயாளர் காவு வண்டி ஒன்று இடை நிறுத்தப்பட்டு, சாரதி சோதனையிடப்பட்டார்.
அதன்போது அவர் சாரதி அனுமதி பத்திரம் (permis) இல்லாதவர் எனவும், அவர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025