▶ RER B தொடருந்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
11 சித்திரை 2024 வியாழன் 13:20 | பார்வைகள் : 11183
RER B தொடருந்தில் ரைஃபிள் வகை துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஏப்ரல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை
Villeparisis (Seine-et-Marne) நகரில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அவர் Denfert-Rochereau தொடருந்து நிலையத்தில் RER B தொடருந்தில் பயணித்த போது அவரிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதை பயணிகள் சிலர் கவனித்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு எச்சரிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து ரைஃபிள் துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் வைத்து குறித்த நபர் Villeparisis நகர காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan