இலங்கையில் 23 வயது பெண் மர்மமான முறையில் மரணம்

11 சித்திரை 2024 வியாழன் 12:17 | பார்வைகள் : 11549
அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 23 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுடன் சென்ற நபர், அவரது சுயநினைவற்ற நிலையை ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து, அவிசாவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த அழைப்பின் பேரில், சீதாவக்க பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.