'மாபெரும் சொல்வதெழுதல்' போட்டி - நாளை பரிசில்...!!

11 சித்திரை 2024 வியாழன் 09:45 | பார்வைகள் : 14201
ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் மாபெரும் சொல்வதெழுதல்
(Grande Dictée) போட்டியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு, நாளை ஏப்ரல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது.
Champ-de-Mars பகுதியில் நாளை பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இடம்பெற உள்ளது. இதில் கிட்டத்தட்ட 3,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டியில் பாடசாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் உள்ளமையால், அதனை சிறப்பிக்கும் விதமாக Citius, Altius , Fortius (இலகு, கடினம், மிகக்கடினம்) ஆகிய பிரிவுகளில் சொல்வதெழுதல் போட்டிகளுக்கான வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025