யூத எதிர்ப்பு தாக்குதல்! - ஒருவர் மருத்துவமனையில்!

3 பங்குனி 2024 ஞாயிறு 08:36 | பார்வைகள் : 10337
யூத மதத்தைச் சேர்ந்த ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது.
20 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர். யூத மதத்தின் அடையாளமான தொப்பி ஒன்றை அணிந்திருந்த ஒருவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை மிக மோசமாக தாக்கியுள்ளது. யூத மதத்துக்கு எதிரான விரோத கருத்துக்களை வெளியிட்ட அவர்கள், தாக்குதல் மேற்கொண்டதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்துக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin கண்டனம் வெளியிட்டுள்ளார். ’தாக்குதல் மேற்கொண்டவரைக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.’ என தெரிவித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1