இலங்கையில் உணவுப்பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிப்பு

2 பங்குனி 2024 சனி 16:32 | பார்வைகள் : 7220
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும், தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் சோற்றுப்பொதி 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025